2 நாட்களாக வெளுத்து வாங்கும் மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா
பதிவு : அக்டோபர் 15, 2020, 08:27 AM
2 நாட்களாக விடாது கன மழை பெய்து வருவதால் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே கரையைக் கடந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 2 நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இதனால், இரு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக் காடாக மாறி உள்ளது. தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஒரே நாளில் 25 சென்டி மீட்டர் மழை கொட்டியதால், நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மேலும் வெள்ள பாதிப்பால் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஐதராபாத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இதனிடையே இரு மாநிலங்களிலும், கன மழையால், 20 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கன மழையால் தத்தளிக்கும் ஆந்திரா, தெலுங்கானா - இரு மாநில முதல்வர்களுடன் மோடி பேச்சு

கனமழையால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு, மத்திய அரசு அனைத்து விதமாக உதவிகளையும் செய்யும் என்று, பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருமாநில  முதலமைச்சர்களுடன் பேசியதாக அவர் தமது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ள பிரதமர் மோடி,சாத்தியமான அனைத்து வழிகளிலும், மத்திய அரசு உதவி வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.

உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆய்வு - 2 நாள் மக்கள் வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தல்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை இணைமைச்சர் கிஷன் ரெட்டி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக மழைப்பொழிவு காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் படை மற்றும் ராணுவ குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

"ஐதராபாத்தில் 20 மடங்கு அதிக மழை"  - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தகவல்

தெலங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ள நிலையில், செஞ்சிலுவை சங்கத்தினர் மூலம் மீட்பு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். 

மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் - 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
 
கேரளா மாநிலத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று 8 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, இடுக்கி அணையின் நீர்மட்டம் 2 ஆயிரத்து 392 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப்பெரியார் அணையின்  நீர்மட்டமும் 127 அடியை எட்டியுள்ளது. 
 
"ஜம்மு- காஷ்மீர், லடாக்கிற்கு ரூ.520 கோடி நிதி ஒதுக்கீடு" - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 

ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலத்திற்கு 520 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய,  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ஜம்மு - காஷ்மீர் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் குறித்து, ஆலோசித்தாக கூறப்படுகிறது. அப்போது, தேசிய கிராமப்புற வாழ்வாதர பணிக்கு, 520 கோடி நீதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் ஏற்பட்ட மின்தடை விவகாரம் : "நாச வேலையாக கூட இருக்கலாம்" - மகாராஷ்டிரா அமைச்சர் நிதின் ரவுத் கருத்து

மும்பையில் ஏற்பட்ட மின்தடைக்கு நாசவேலை கூட காரணமாக இருக்கலாம் என்று, மகாராஷ்டிரா எரிசக்தி அமைச்சர் நிதின் ரவுத் தெரிவித்தார். மஹாராஷ்டிராவின் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில், இரண்டு நாட்களுக்கு முன் திடீர் மின் தடை ஏற்பட்டது. இதனால், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து தடைபட்டது. அலுவலகங்கள், வீடுகளில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது குறித்து  பேசிய அம்மாநில அமைச்சர் நிதின் ரவுத், இது நாசவேலையாக கூட இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.

"முலாயம் சிங் யாதவிற்கு கொரோனா தொற்று"

சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உடல் நிலை சற்று பாதிக்கப்பட்ட நிலையில் அவர், கொரோனா பரிசோதனை செய்தார். சோதனை முடிவில் முலாயம் சிங்கிற்கு தொற்று உறுதியானதாக, சமாஜ்வாடி கட்சி டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் நலமுடன் இருப்பதாகவும், மற்ற யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

606 views

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

220 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

155 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

102 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

22 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

19 views

பிற செய்திகள்

பிரெஞ்சு துணை தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

பிரான்சில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

97 views

ராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன?

அக்டோபர் 28 ம் தேதி முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பீகார் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிம்லா சென்று உள்ளார். அங்கு அவர் தலைநகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் சப்ராவில் அமைந்துள்ள தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு, சொந்தமான ஒரு பங்களாவில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

124 views

2020-க்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம் - பட்டியல் வெளியீடு

2020 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு பதக்கம் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

14 views

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபத்தில் சரிவு - ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் அதிகரிப்பு

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

102 views

"நடுநிலைமையோடு எப்படி செயல்பட முடியும்?" - பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி

கூகுள் நிறுவனத்தின் நடுநிலைமை மற்றும் டேட்டா பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான நாடாளுமன்ற குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

6 views

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

89 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.