காதலை ஏற்க மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றிக்கொலை : பணிபுரிந்த இடத்திற்கே சென்று பெண்ணை எரித்த நபர்
பதிவு : அக்டோபர் 14, 2020, 04:32 PM
காதலை ஏற்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம் ஆந்திராவில் அரங்கேறி இருக்கிறது.
காதலை ஏற்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம் ஆந்திராவில் அரங்கேறி இருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணியை இப்போது பார்க்கலாம்... 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சித்தன்ன பேட்டையை சேர்ந்த இளம்பெண் சின்னாரி. செவிலியரான இவர், விஜயவாடாவில் உள்ள கொரோனா மையத்தில் வேலை பார்த்து வந்தார். 

இவரை நாகபூஷணம் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் சின்னாரி இவரின் காதலை ஏற்க மறுத்த போதிலும், நாகபூஷணம் அவரை விடுவதாக இல்லை. தினம் தினம் அவர் வேலைக்கு செல்லும் போதெல்லாம் பின்தொடர்ந்து போய் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

ஒரு கட்டத்திற்கு மேல் நாகபூஷணத்தின் தொல்லையை பொறுக்க முடியாத அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாருக்கும் நாகபூஷணத்தை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், சின்னாரி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து பிரச்சினை செய்துள்ளார். 

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே திடீரென தான் மறைத்து வைத்திருந்த  பெட்ரோலை எடுத்து சின்னாரி மீது ஊற்றி தீ வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் உடல் கருகி அந்த பெண் உயிரிழந்தார். உடலில் தீப்பற்றிய படி அங்கும் இங்கும் அவர் ஓடி கடைசியில் அடங்கிப் போனார் அந்த இளம்பெண். இந்த சம்பவத்தின் போது  நாகபூஷணத்துக்கும் தீக்காயம் ஏற்பட்டது. 

80 சதவீத காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாகபூஷணம். காதலிக்க மறுத்ததற்காக பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

400 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

181 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

56 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

18 views

பிற செய்திகள்

இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் சந்தர்ப்பவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

15 views

மாத்திரைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தேவி சிலை - அசாம் கலைஞரின் அசத்தல் படைப்பு

அசாமில் காலாவதியான மாத்திரைகளை பயன்படுத்தி துர்கா தேவி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

10 views

ஜண்டேவாலான் கோயிலில் நவராத்திரி விழா - 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை

நவராத்திரியை யொட்டி, டெல்லியில் உள்ள ஜண்டேவாலான் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று, ஆதிசக்திக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

8 views

தீபாவளிக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.150 வரை எட்டும் அபாயம்..!

வெங்காயம் உற்பத்தி அதிகம் செய்யப்படும் மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.

26 views

ஜூன்-2021-ல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி - பாரத் பயோடெக் நிறுவனம் திட்டம்

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை வெளியிட பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

19 views

"அண்டை நாடுகளுடன் நல்ல உறவையே இந்தியா விரும்புகிறது" - ராஜ்நாத் சிங் தகவல்

மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் டார்ஜிலிங்கின் சுக்னாவில் உள்ள 33-வது படைப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.