கனமழை - ஐதராபாத்தில் இயல்பு வாழ்க்கை முடக்கம் - சாலையில் மழைநீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்

கனமழையால், ஐதராபாத் நகரில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் இடுப்பளவுக்கு மழைநீர் சூழ்ந்தது.
கனமழை - ஐதராபாத்தில் இயல்பு வாழ்க்கை முடக்கம் - சாலையில் மழைநீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்
x
கனமழையால், ஐதராபாத் நகரில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் இடுப்பளவுக்கு மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.  சாலைகளில் ஆறுபோல் கரைபுரண்ட மழைநீரில், கார் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.


பாதிக்கப்பட்டவர்கள் படகுகள் மூலம் மீட்பு

ஐதராபாத்தில் உள்ள தோலி சவுகி பகுதி, மழைநீரால் சூழப்பட்டது. தகவல் அறிந்த அரசு நிர்வாகம், மீட்பு பணிகளை துரிதப்படுத்தியது. அங்கிருந்து மக்களை, மாநில பேரிடர் மீட்பு குழு மற்றும் தீயணைப்பு துறையினர்  படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர். 


வீட்டின் மீது பாறை சரிந்து 8 பேர் உயிரிழப்பு - ஐதராபாத் எம்.பி. ஓவைசி நேரில் ஆய்வு

ஐதராபாத் அருகே உள்ள பந்தலகுடா பகுதியில், கனமழை காரணமாக வீடு ஒன்றின் மீது பாறை சரிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்து 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியை ஐதராபாத் தொகுதி எம்.பி. அசாதுதீன் ஓவைசி நேரில் பார்வையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்