"நிர்பய்" ஏவுகணையில் தொழில்நுட்ப கோளாறு - டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் ஆய்வு

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "நிர்பய்" ஏவுகணை, சப்சானிக் ரகத்தை சேர்ந்தது. ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது.
நிர்பய் ஏவுகணையில் தொழில்நுட்ப கோளாறு - டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் ஆய்வு
x
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "நிர்பய்" ஏவுகணை, சப்சானிக் ரகத்தை சேர்ந்தது. ஆயிரம் கிலோ மீட்டர்  வரை சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. கடந்த 2014-ம் ஆண்டு முதல்  பரிசோதனையில் இருக்கும் இந்த ஏவுகணையை ஒடிசாவின் பாலாசோரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் டி.ஆர்.டி.ஒ. அதிகாரிகள் சோதித்தனர். அப்போது ஏவுகணையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏவுகணை சோதனையை டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கைவிட்டனர்.

மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக விளங்கும் சிம்லா தர்கா

சிம்லாவில் உள்ள தர்கா ஒன்று நீண்ட காலமாக மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக இருந்து வருகிறது.

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவின் கச்சி ஹாட்டி பகுதியில் ஹஸ்ரத் பாபா தர்கா உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த பிரசித்திப் பெற்ற தர்காவுக்கு, மத, இன, வேறுபாடின்றி எல்லா மதத்தை சேர்ந்த மக்களும் வருகை புரிகின்றனர். ஆண்கள்,ள பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்கள் தர்காவுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். மேலும் இந்த தர்காவை 100 சதவீதம் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் நிர்வாகம் செய்வதால், ஹஸ்ரத் பாபா தர்கா, மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாய் விளங்கி வருகிறது.

வரும் 19முதல் பள்ளிகள் திறக்க எதிர்ப்பு - தெருவில் இறங்கி போராடும் பெற்றோர்கள் 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன் ஒரு பகுதியாக காசியாபாத்தில் ஒரு இடத்தில் ஒன்று திரண்ட பெற்றோர்கள், அரசைக் கண்டித்து போராட்டம் மேற்கொண்டனர். கொரோனா பரவல் காலத்தில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

820 அடி உயரத்தில் இருந்து விழுந்த நபர் - காயங்களுடன் நபரை மீட்ட எஸ்டிஆர்எப் 

உத்தரகாண்ட் மாநிலம் ஜங்கிள்செட்டி பகுதியில் 820 அடி உயர மலையில் இருந்து கீழே விழுந்த நபரை, எஸ்டிஆர்எப் குழு பத்திரமாக மீட்டது. ஜார்ஜ் பைரவ்கேத்தி என்ற இடத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட போது, தவறி கீழே விழுந்த அந்த நபருக்கு, கை,கால் முறிவுகளுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். 

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி சூதாட்டம் - மேலும், ஏழு பேரை கைது செய்த போலீஸ் 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் தொடர்புடையதாக மேலும், ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினி, செல்போன், பணம் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது வரை ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிக்னலில் மோதி கொண்ட வாகனங்களில் தீ - ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் காயம் 

தெலங்கானா மாநிலம் யதாத்ரியில், சிக்னலில் இருந்த புறப்பட தயாரான வாகனங்கள் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார். இரு சக்கர வாகனம் முழுவதும் எரிந்து எலும்புகூடானது. சிறு சேதத்துடன் கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

இளைஞரை கட்டி வைத்து அடித்த குடும்பம் - இளைஞரின் காதலை ஏற்க மறுப்பு 

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அருகே இளைஞர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து குடும்பத்தினரே அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை இளைஞர் காதலிப்பதாகவும், அதனை ஏற்க முடியாததால் அந்த குடும்பத்தினர் இளைஞர் கட்டி வைத்த உதைத்து போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கொள்ளையை தடுக்க முயன்ற வியாபாரியை சுட்டுக் கொன்ற திருடர்கள் 

அரியானா மாநிலம் ரோஹ்டக்கில், கொள்ளையை தடுக்க முயன்ற வியாபாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவியில் பதிவான இந்த காட்சிகளை வெளியிட்ட காவல்துறை, அதன் அடிப்படையில் முகமூடி கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

விபத்து ஏற்படுத்திய விவகாரம் - ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய கும்பல் 

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில், ஆட்டோ ஓட்டுநரை 4 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஜபல்பூர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்