நவராத்திரி விழா : சாமி சிலைகளை பாதயாத்திரையாக கொண்டு செல்ல அனுமதி - தமிழக, கேரள அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு
பதிவு : அக்டோபர் 13, 2020, 09:20 AM
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சாமி சிலைகளை வழக்கம் போல் பாதயாத்திரையாக கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது,.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு கன்னியாகுமரியில் இருந்து தேவாரக்கெட்டு சரஸ்வதி, குமாரகோவில் முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை ஆகிய சுவாமி சிலைகள் தமிழக-கேரள காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையோடு  பாதயாத்திரையாக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.  ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக, சிலைகளை பாதயாத்திரையாக கொண்டு செல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது,, இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, கேரளா அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்  மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள்  உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்,.  அப்போது எப்போதும் போல பாதயாத்திரையாகவே சுவாமிசிலைகளை கொண்டு செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது,. ஆனால்  சாமிசிலைகள் செல்லும் போது வரவேற்பு நிகழ்ச்சிகள் எதுவும் கூடாது எனவும் பொதுமக்கள் கூடி நிற்க கூடாது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவையொட்டி,  நாளை பத்மநாபபுரத்தில் இருந்து மூன்று சிலைகளும் பல்லக்குகளில் பாதயாத்திரையாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

601 views

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

215 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

152 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

100 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

20 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

19 views

பிற செய்திகள்

ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று கூடுகிறது

ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.

10 views

சர்தார் வல்லபாய் பட்டேல் 145-வது பிறந்த தினம் - உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்ததினத்தை ஒட்டி, டெல்லியில் அவரது உருவப்படத்திற்கு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

12 views

"வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத மோடி" - தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு

வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையில் எங்கள் குடும்பம் மீது தனிநபர் தாக்குதல் நடத்துகிறார் என தேஜஸ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உள்ளார்.

9 views

நவ. 3-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் - பிரபல இந்திய ஜோதிடர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாக பெற்று டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் என்று பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.

536 views

வரலாற்றை மாற்றி போட்ட முழக்கங்கள் - எந்த முழக்கம் பீகார் தேர்தலில் எடுபடும்?

தேர்தல் களத்தில் மக்களை கவரும் முழக்கங்கள் எப்போதுமே முக்கியத்துவம் பெறுகின்றன.

211 views

"பருவமழையை எதிர்கொள்ள புதுச்சேரி தயார்" - பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரியில் பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் என பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.