பீகார் சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரம் - சோனியா, ராகுல், மன்மோகன் சிங் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அளிப்பு
பதிவு : அக்டோபர் 11, 2020, 10:01 AM
பீகார் மாநில சட்டப் பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
பீகார் மாநில சட்டப் பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் நட்சத்திர பிரச்சாரகர்கள் அடங்கிய பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டு உள்ளது. சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், சச்சின் பைலட், ராஜஸ்தான் முதல்வர் கெலோட் உள்ளிட்ட 30 பேர் பட்டியல் அளிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப், சத்தீஸ்கர் முதல்வர்கள், ஷக்தி சிங் கோகில், தாரிக் அன்வர், சத்ருகன் சின்கா, ஷகீல் அகமது, கீர்த்தி ஆசாத், நிகில் குமார், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அனில் சர்மா, பிரமோத் திவாரி,  அகிலேஷ் பிரதாப் சிங், உதித் ராஜ் மற்றும் ராஜ்பப்பர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. ராகுல்காந்தி 6 பிரச்சார பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது

பிற செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் - யாருக்கு வாய்ப்பு?

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பதை தந்தி டிவி ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தை பார்க்கலாம்...

11 views

கொரோனாவுக்கு பாஜக எம்.எல்.ஏ. மரணம் - 21 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கிரண் மகேஷ்வரி கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

17 views

கட்சி குறித்து தானே அறிவிப்பதாக ரஜினி பேச்சு - பொறுமையாக இருங்கள் - ரஜினி வேண்டுகோள்

சென்னையில், மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடர்பாக தானே முடிவெடுத்து அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

112 views

"கொரோனா காலத்தில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

கொரோனா காலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவி்த்துள்ளார்.

64 views

சமஸ்கிருத செய்தி தொகுப்பிற்கு ஸ்டாலின் கண்டனம்

சமஸ்கிருத செய்தி தொகுப்பை பொதிகை மற்றும் பிற மாநில மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

170 views

வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி சலோ பேரணி : புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்

டெல்லியில் உள்ள புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது என, விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

280 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.