"கொரோனாவுக்கு நாடு முழுவதும் விரைவில் விழிப்புணர்வு பிரசாரம்" - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

கொரோனாவுக்கு தடுப்பூசி இல்லாத நிலையில் முக கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியை கடைப்பிடிப்பது தொடர்பாக நாடு முழுவதும் விரைவில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனாவுக்கு நாடு முழுவதும் விரைவில் விழிப்புணர்வு பிரசாரம் - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
x
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது, கொரோனா வைரசுக்கு தடுப்பூசி இல்லாத நிலையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை  கடைபிடித்தல் மற்றும் கைகளை நன்றாக கழுவுதல் மட்டுமே பாதுகாப்பானதாக இருக்கும் என்றனர். பொது இடங்களில் இந்த நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விரைவில் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்தியாவில் இயற்கை எரிவாயு விற்பனை மற்றும் விலையில் வெளிப்படைத்தன்மை நிலவுவதை உறுதி செய்ய வெளிப்படையான மின்னணு ஏல நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் அவர்கள் கூறினர்.



Next Story

மேலும் செய்திகள்