மண்டல மகர விளக்கு பூஜை - பக்தர்களை அனுமதிக்கும் விவகாரம் : கேரள தலைமை செயலாளர் தலைமையிலான குழு அறிக்கை

சபரிமலையில் மண்டல பூஜை மகரவிளக்கு போன்ற திருவிழா நாட்களில் 5 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கவும் அதிகாரிகள் குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மண்டல மகர விளக்கு பூஜை - பக்தர்களை அனுமதிக்கும் விவகாரம் : கேரள தலைமை செயலாளர் தலைமையிலான குழு அறிக்கை
x
கொரோனா விவகாரத்தால் கடந்த ஏழு மாதங்களாக சபரிமலையில் மாதாந்திர பூஜைகளின் போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், மண்டல பூஜை மகரவிளக்கு சீசன் விரைவில் துவங்க உள்ள நிலையில், பக்தர்களை   அனுமதிக்கும் போது ஏற்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகள்  வழிகாட்டுதல் உருவாக்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கேரள அரசு கேரளத் தலைமைச் செயலாளர் தலைமையில் பல்வேறு துறைச் செயலாளர்கள் அடங்கிய குழு ஒன்றை   நியமித்தது. அந்தக் குழு ஆய்வு செய்து ஒரு அறிக்கையை கேரள அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், மகர விளக்கின் போது திங்கள் முதல் வெள்ளி வரை நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், சனி ஞாயிறு தினங்களில் 2000 பேர் வரை அனுமதிக்கவும் மண்டல பூஜை மகரவிளக்கு போன்ற திருவிழா நாட்களில் 5 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கவும் அதிகாரிகள் குழு பரிந்துரைத்துள்ளதாக கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார். 
 


Next Story

மேலும் செய்திகள்