வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் - கர்நாடக காங்கிரஸ் தலைவர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை/

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததான புகாரின் பேரில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
x
இன்று காலை முதல் சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக அமலாக்க துறையினரிடம் இருந்து கிடைத்த தகவலை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அவரது வீட்டில் இருந்து 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என டி.கே. சிவக்குமார் தரப்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சோதனை நடந்து வருகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள இ​டைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தடுக்க, மத்திய பா.ஜ.க. அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்