ஓடும் லாரியில் செல்போன் திருடிய கும்பல் - 2 பேர் கைது...9 பேரை தேடும் தனிப்படை

சென்னையிலிருந்து சென்ற கண்டெய்னர் லாரியில் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நெடுஞ்சாலைக் கொள்ளை கும்பலை மத்தியப்பிரதேசத்திற்கு விரட்டிச் சென்று ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். ​
ஓடும் லாரியில் செல்போன் திருடிய கும்பல் - 2 பேர் கைது...9 பேரை தேடும் தனிப்படை
x
எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றிக் கொண்டு தேசிய நேடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை குறி வைத்து திருடும் கும்பல் ஆந்திர போலீசாரிடம் சிக்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரான புத்தம் புதிய செல்போன்கள், பெட்டிகளில் அடைக்கப்பட்டு ஆந்திரா வழியாக புறப்பட்டன. இதனை ஆள் போட்டு கண்காணித்த கொள்ளை கும்பல், ஆந்திர எல்லையை தொட்டதும் கொள்ளையை அரங்கேற்ற திட்டமிட்டது. காசா சுங்கச்சாவடியை தொட்டதும் கச்சிதமாக திட்டமிடப்பட்ட கொள்ளை அரங்கேற்றப்பட்டது. ஓடும் லாரியை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று லாவகமாக ஏறி கொள்ளையடிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 

இதையடுத்து மத்திய பிரதேசம் சென்ற ஆந்திர போலீசார் ரவி மற்றும் ரவி மற்றும் ஷாருக் கான் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக ஒன்பது பேரை ஐந்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள், நான்கரை லட்சம் மதிப்பிலான கார் மற்றும் லாரி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்