"தே.ஜ.கூட்டணி உடன் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதில்லை" - ஆலோசனை கூட்டத்தில் லோக் ஜன சக்தி கட்சி முடிவு

பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதில்லை என லோக் ஜன சக்தி கட்சி முடிவெடுத்துள்ளது
தே.ஜ.கூட்டணி உடன் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதில்லை - ஆலோசனை கூட்டத்தில் லோக் ஜன சக்தி கட்சி முடிவு
x
பீகார் மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் கூட்டணி அமைப்பது குறித்து லோக் ஜன சக்தி கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் அதன் தலைவர் சிராக் பாஸ்வான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து லோக் ஜன சக்தி கட்சி தேர்தலை சந்திக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக, லோக் ஜன சக்தி கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.லோக் ஜனசக்தி கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் இடையே கொள்கை அளவில் வேறுபாடு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பீகாரில் நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தனித்து தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்