ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் : தலித் பெண்ணின் வீட்டிற்கு சென்ற ராகுல், பிரியங்கா

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினர்.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் : தலித் பெண்ணின் வீட்டிற்கு சென்ற ராகுல், பிரியங்கா
x
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹாத்ராஸ் நோக்கி வாகனங்களில் புறப்பட்டனர். நொய்டா எல்லையில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 5 பேர் மட்டுமே ஹாத்ராஸ் செல்ல அனுமதி வழங்கினர். இதையடுத்து ராகுல், பிரியங்கா உடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரும் ஹாத்ராஸ் சென்றனர். பாலியல் வன்கொடுமை செய்ததால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தலித் பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவர்கள், குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.  

சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கடைசியாக ஒரு முறைகூட தங்கள் மகளை பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பொறுப்பை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், நீதி வழங்கப்படும் வரை, போராட்டத்தைத் தொடருவோம் என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்