346 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் கடத்தப்பட்ட 346 கிலோ போதைப்பொருள் போலீசாரிடம் சிக்கியது.
346 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது
x
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் கடத்தப்பட்ட 346 கிலோ போதைப்பொருள் போலீசாரிடம் சிக்கியது. ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில் கேனப்பஸ் என்ற போதைப்பொருள் கடத்தப்பட்டது தெரியவந்தது. 346 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்துள்ளனர் 

இனி, கொண்டாட்டங்கள் இருக்காதோ? - துர்கா சிலை தயாரிப்பாளர்கள் வேதனை

 உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியில் சுவாமி சிலைகள் தயாரிப்பவர்கள், கொரோனா காரணமாக தொழில் நலிந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நவ ராத்திரி பண்டிகையை ஒட்டி துர்கா சிலைகளை உருவாக்கிக்கொண்டிருந்த அவர்கள், விற்பனை செய்வோம் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் மாநிலத்தில் கொண்டாட்டம் நடப்பதற்கான அறிகுறி இல்லாததால் சிலை தயாரிப்பாளர்கள் வேதனையில் உள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு வினாத்தாள் கசிந்தது

அசாம் மாநில காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்ற நிலையில், அந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாளை கசிய விட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்

அச்சுறுத்திய ஆட்கொல்லி சிறுத்தையை சுட்டு கொன்ற வனத்துறை

உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். ஆட்களை அடித்து கொன்று சாப்பிட்டு வந்த அந்த சிறுத்தை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூண்டு வைத்த பிடிக்க அவர்கள் திட்டமிட்ட நிலையில் அது பலனளிக்காததால் சிறுத்தையை சுட்டுக்கொன்றதாக மாவட்ட வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்