சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடு - காஷ்மீரில் இரு மாவட்டங்களுக்கு 4 ஜி சேவை நீட்டிப்பு

ஜம்மு காஷ்மீரில் உதாம்பூர், கந்தர்பால் மாவட்டங்களில் 4 ஜி நெட்வோர்க் சேவை அக்டோபர் 21-ம் தேதி வரை நீக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடு - காஷ்மீரில் இரு மாவட்டங்களுக்கு 4 ஜி சேவை நீட்டிப்பு
x
ஜம்மு காஷ்மீரில் உதாம்பூர், கந்தர்பால் மாவட்டங்களில் 4 ஜி நெட்வோர்க் சேவை அக்டோபர் 21-ம் தேதி வரை நீக்கப்பட்டுள்ளது. போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் மற்றும் முழுமையான விசாரணைக்குப் பின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்ட போது துண்டிக்கப்பட்ட இன்டர்நெட் சேவையில் படிப்படியாக மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் - இந்தியா கேட் அருகே மாணவர் சங்கத்தினர் முழக்கம்

உத்தரப்பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி இந்தியா கேட் அருகே அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் பீம் ஆர்மி அமைப்பின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்த 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைகளில் தீப்பந்தம் ஏந்தி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சண்டிகரில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தங்களை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் விரோதமானது என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். விவசாய சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டதை கண்டித்தும், உத்தரப்பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தலித் பெண் பாலியல் வன்கொடுமை - மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க கோரி மும்பையில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலித் பெண் மரணத்திற்கு நீதி கேட்டு கைகளில் பதாகைகள் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்

தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு - ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்த நிலையில், யோகி ஆதித்நாத் அரசை கண்டித்து காங்கிரஸ் வேவா தளம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றனர். 

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி - 400 கி.மீ. தூரம் வரை பாய்ந்து, இலக்கை தாக்கியது...

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஓடிசாவில் பாலசூர் கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது. முழுக்க முழுக்க உள்நாட்டு மூலப்பொருளை கொண்டு 400 கி.மீட்டர் தொலைவு வரை பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும். 

விஞ்ஞானிகளுக்கும், என்ஜினியர்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு 

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இதற்கு, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் கூடுதல் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன், பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதால், மற்றொரு மையில் கல்லை எட்டியுள்ளதாக
பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்