"அக்.15 முதல் புதிய தளர்வுகள்" - மத்திய அரசு

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்துள்ள மத்திய அரசு , 15ம் தேதி முதல் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
அக்.15 முதல் புதிய தளர்வுகள் - மத்திய அரசு
x
நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்துள்ள மத்திய அரசு , 15ம் தேதி முதல் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. 

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வழக்கம் போல அத்தியாவசிய செயல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறியுள்ள மத்திய அரசு, வரும் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் மற்றும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் ஆகியவற்றை 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதித்துள்ளது. 

இதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தனியே வெளியிடும் என கூறியுள்ள  மத்திய அரசு, வர்த்தகக் கண்காட்சிகள் நடைபெற அக்டோபர் 15 முதல் அனுமதித்துள்ளது. 

விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கான நீச்சல் குளங்கள் மட்டும் திறக்கும் அனுமதியுடன், பொழுதுபோக்கு பூங்கா போன்றவை திறக்க தனியாக வழிகாட்டு முறை வெளியாகும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளை படிப்படியாக திறப்பது பற்றி அக்டோபர்15-ஆம் தேதிக்கு பிறகு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முடிவெடுக்கலாம்.


அவ்வாறு முடிவு எடுப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிலையங்களுடன் ஆலோசித்து ஆய்வு செய்த பிறகே முடிவு எடுக்க வேண்டும்.

ஆன்லைன் வழி கல்வி கற்றல் முறையை தொடர்ந்து ஊக்குவிக்க கூறியுள்ள மத்திய அரசு, 100 நபர்களுக்கும் மேலான கூட்டங்களுக்கு அக்டோபர்-15 முதல் அனுமதி வழங்கலாம்.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட சர்வதேச விமான போக்குவரத்தை தவிர மற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்