"நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான் குற்றமற்றவர்களா?"
பதிவு : செப்டம்பர் 30, 2020, 05:39 PM
நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் குற்றமற்றவர்கள் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போதைப் பொருள் விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் இவர்களின் வங்கி பரிவர்த்தனைகளும் சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே தீபிகா படுகோன், அவரின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் குற்றமற்றவர்கள் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மால், ஹாஷ், Weed  என அவர்கள் வாட்ஸ் அப்பில் பேசியது சிகரெட்டுகளின் தரம் பற்றி தான் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இவர்களுக்கு போதைப் பொருள் புழக்கத்தில் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என விசாரணை நடத்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.