டெல்லி - ஹைதராபாத் மோதல் : சுவாரஸ்ய தகவல்கள்
பதிவு : செப்டம்பர் 30, 2020, 03:19 PM
நடப்பு ஐபிஎல் தொடரில், ஐதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. டெல்லி அணியுடன் நேற்று நடந்த மோதலில், நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை தற்போது காணலாம்..
நடப்பு ஐபிஎல் தொடரில் , டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 போட்டிகளிலும் , பவர் பிளேயில் 40 ரன்களுக்கு குறைவாகவே எடுத்துள்ளது. ரன் ரேட் 6க்கும் குறைவாக உள்ள போதிலும் , டெல்லி அணி 2 போட்டிகளில் வெற்றியும் , ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெல்ல முக்கிய காரணம் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், 6க்கும் மேற்பட்ட யார்க்கர்கள் வீசி டெல்லி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். 17வது ஓவரை வீசிய அவர் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

ஐபிஎல் போட்டிகளில் , ஹைதராபாத் வீரர் ரஷித் கான் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. சென்னை அணி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கடைசி இடத்தில் உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.