குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா
பதிவு : செப்டம்பர் 30, 2020, 02:40 PM
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்றபோது கொரோனா உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா நாயுடுவிற்கு கொரோனா இல்லை என சோதனையில் தெரிய வந்துள்ளது.

குடியரசு துணை தலைவர் நலம் பெற பிரார்த்தனை- முதலமைச்சர் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, கொரோனா தொற்றில் இருந்து நலம்பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தொற்றுக் காரணமாக வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடியரசு துணை தலைவர், உடல் ஆரோக்கியத்தோடு இருக்க எல்லா வல்ல இறைவனை வேண்டிகொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

"வெங்கையா நாயுடு பூரண நலம் பெற பிரார்த்தனை" - துணை முதல்வர் ஓபிஎஸ் டுவிட்டரில் பதிவுதுணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கொரோனா தொற்றில் இருந்து பூரண நலமடைய விரும்புவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில், வெங்கையா நாயுடு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதை அறிந்ததாகவும், மன உறுதியுடன் இந்தக் காலக் கட்டத்தை அவர் கடக்க பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை - கனமழைக்கு இதுவரை 28 பேர் பலி

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

343 views

"பெண்களை மதிக்காத கட்சி காங்கிரஸ்" - ஜோதிர் ஆதித்ய சிந்தியா குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி ஒரு போதும் பெண்களை மதி​த்தது கிடையாது என அண்மையில் அக்கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க. வில் சேர்ந்துள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

20 views

பிற செய்திகள்

மாநில மொழிகளிலும் ஜே.இ.இ. தேர்வுகள் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

மாநில மொழிகளிலும் ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

33 views

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தகவல்

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி ராய் பி. தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

10 views

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 3 வீரர்கள் தரையிறங்கினர்

பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.

13 views

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு - 78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும்

நாடு முழுவதும் உள்ள11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

104 views

"மீண்டும் எழுச்சி பெறும் வாசற்படியில் பொருளாதாரம்" - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேச்சு

கொரோனா தாக்கம் மற்றும் பொது முடக்கத்தினால் சரிவடைந்த பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறும் வாசற்படியில் இருக்கிறோம் என்று மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

177 views

சுற்றுலா விசா தவிர மற்ற விசாக்களுக்கு அனுமதி - வெளிநாட்டவர்களுக்கு, அனுமதி வழங்கிய உள்துறை அமைச்சகம்

சுற்றுலா விசா தவிர மற்ற விசாக்கள் மூலமாக வெளிநாட்டவர்கள் இந்தியா வர உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

1897 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.