எல்லையில் பதற்றத்தை தணிப்பதில் ஏற்படும் காலதாமதம்

சீன எல்லையில் குளிர்காலத்தில் நிலைமையை சமாளிக்கும் வகையில் படைகளை நிறுத்த இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.
எல்லையில் பதற்றத்தை தணிப்பதில் ஏற்படும் காலதாமதம்
x
லடாக் எல்லைப் பிரச்சினையில் சீனாவுடன் விரைவாக தீர்வு காணப்படும் என்பதில் நம்பிக்கை குறையும் நிலையில், படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் பணியில் இந்திய ராணுவம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இப்பகுதியில், இரு தரப்பும் விமானப்படை, டாங்கிகள் அணிவகுப்புடன் தலா 50 ஆயிரம் படை வீரர்களை நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில், குளிர்காலத்தில் எல்லையில் சீன தரப்பின் படை பலத்திற்கு சரிசமமாக படைகள் நிறுத்தப்படும் என இந்திய ராணுவ தரப்பு தகவல்கள் கூறுகின்றன. கடுமையான குளிர் காரணமாக மலையில் படை வீரர்களின் நலன்கருதி தற்போதைய நிலையிலிருந்து கீழ் இறங்க வேண்டியது இருக்கும் என்றும் படைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியது இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், குளிர்காலத்திலும் முக்கியமான பகுதிகளில் படைகளை நிறுத்தி வைக்க சீனா முடிவு எடுக்கலாம். எனவே, எத்தனைப் படை வீரர்கள் தேவைப்படுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்