பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்

இந்தியாவில் பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருக்கிறது.
பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்
x
இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதும் தென் கொரியாவை சேர்ந்த பப்ஜி நிறுவனம், செயலியை இந்தியாவில் வெளியிடுவதற்கான உரிமத்தை இனி சீனாவின் டென்சன்ட் கேம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கமாட்டோம் என அறிவித்தது. மேலும், இந்தியாவில் செயலியை மீண்டும் வெளியிடுவதற்கான வழியை ஆராய்வதாகவும் தெரிவித்தது. இந்நிலையில், பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறும் முடிவில் மத்திய அரசு இல்லையென தகவல் வெளியாகியுள்ளது. பப்ஜி விளையாட்டில் இடம்பெற்றிருக்கும் வன்முறை தொடர்பாக பலதரப்பிலிருந்து புகார்கள் வந்துள்ளது என்றும் உரிமையாளர் மாறுவதால் மட்டும் வன்முறை மாறாது என்றும் மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியாவில் விளையாட்டை மீண்டும் அறிமுகம் செய்ய விரும்பும் தென் கொரிய நிறுவனம், அதற்காக செய்ய வேண்டிய பணிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்