கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தது
பதிவு : செப்டம்பர் 26, 2020, 04:18 PM
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த தொடர் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும், நீரின் அளவு நான்காயிரத்து 943 கன அடியாக குறைந்தது.
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த தொடர் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து
வெளியேற்றப்படும், நீரின் அளவு நான்காயிரத்து 943 கன அடியாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 27 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்தது. தற்போது வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது. தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. மெயின் அருவி,  ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

தெலுங்கானா ஷம்சாபாத் பகுதியில் தொடர் மழை - பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்

தெலுங்கானா மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. ஷம்சாபாத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கிடையே மாநிலத்தில் மேலும் மழை தொடரும் என்றும் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய  வாய்ப்பு உள்ளது என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.