பாலிவுட் போதைப்பொருள் வழக்கு விசாரணை தீவிரம் - தீபிகா படுகோன் ஆஜர்
பதிவு : செப்டம்பர் 26, 2020, 04:12 PM
மும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் ஆஜராகியுள்ளார்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணையில், அவருடைய காதலி ரியாவுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான வாட்ஸ்-அப் குழு உரையாடல்களை கொண்டு போலீசார் அதிரடி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட சுஷாந்த் சிங் மேலாளர் ஜெயா சாகாவிடம் விசாரித்த போது, குறிப்பிட்ட வாட்ஸ்-அப் குழுவில் தீபிகா படுகோனியின் மேலாளர் கரிஷ்மா பிரகாசும் ஒரு உறுப்பினர் என தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தீபிகாவுக்கும், கரிஷ்மா பிரகாசுக்கும் சிறப்பு விசாரணை குழுவினர் சம்மன் அனுப்பினர். சம்மனை ஏற்ற தீபிகா படுகோன் மும்பையில் இருக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகியுள்ளார். கரிஷ்மா பிரகாசிடம் நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று 2வது நாளாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதேபோல், நடிகை ஷ்ரத்தா கபூரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவில், விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

போதைப் பொருள் வழக்கு- நடிகை ஸ்ரத்தா கபூர் ஆஜர்

மும்பையில் போதைப் பொருள் வழக்கில் விசாரணைக் குழு முன்பு நடிகை ஸ்ரத்தா கபூர் ஆஜரானார். முன்னதாக அவருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து அவர், விசாரணைக்கு குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.