பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிப்பு

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிப்பு
x
243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில்,  கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா  தளமும் இணைந்து போட்டியிட்டு ஆட்சி அமைத்தன. ஆனால், 2017ம் ஆண்டு இருகட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால், நிதிஷ்குமாருடன், எதிர்க்கட்சியாக இருந்த பாஜக,  கூட்டணி அமைத்து ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு பீகார் சட்டப்பேரவை காலம் வரும்  நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து, பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை,  தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.


Next Story

மேலும் செய்திகள்