சர்வதேச கோவா திரைப்பட விழா தள்ளி வைப்பு - 2021 ஜனவரி 16-24 வரை திரைப்பட விழா நடைபெறும்
பதிவு : செப்டம்பர் 24, 2020, 04:32 PM
கோவாவில் நவம்பர் மாதம் நடக்க இருந்த 51-வது சர்வதேச திரைப்பட விழா, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கோவாவில் நவம்பர் மாதம் நடக்க இருந்த 51-வது சர்வதேச திரைப்பட விழா, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமலான நிலையில், உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நின்றுபோனது. இதன் ஒருபகுதியாக கோவா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கி, 28ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக்கு  பிறகு மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முடிவெடுத்துள்ளார். திரை நட்சத்திரங்கள் பங்கேற்பில், ஜொலி ஜொலிக்கும் இந்த நிகழ்வு, 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.