செஸ் வரிகளை ரிசர்வ் நிதிகளுக்கு மாற்றாத மத்திய அரசு - சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல்

2018-19 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு, செஸ் வரிகளாக 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்ததது.
செஸ் வரிகளை ரிசர்வ் நிதிகளுக்கு மாற்றாத மத்திய அரசு - சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல்
x
2018-19 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு,  செஸ் வரிகளாக 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்ததது.  இதில்  ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயை குறிப்பிட்ட ரிசர்வ் நிதிகளுக்கு மாற்றாமல், தன்னிடமே வைத்து கொண்டதாக நேற்று வெளியிடப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கை கூறியுள்ளது.  கடந்த 10 ஆண்டுகளில், கச்சா எண்ணை மிது விதிகப்பட்ட செஸ் வரியில் இருந்து ஒரு லட்சத்து 24 ஆயிரம்  கோடி ரூபாய் அளவுக்கு எண்ணை துறை வளர்ச்சி நிதியில் சேர்க்கப்படவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.   அதேபோல் ஜி.எஸ்.டி இழப்பீடு செஸ் வரியில் இருந்து 40 ஆயிரத்து 806 கோடி, இதே போல் சம்பந்தப்பட்ட ரிசர்வ் நிதிக்கு மாற்றப்படமல் மத்திய அரசு வசமே உள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்