கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திடுக - குடியரசுத் தலைவருக்கு 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்
பதிவு : செப்டம்பர் 24, 2020, 03:02 PM
கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திடுக என்று கோரிக்கை விடுத்து, குடியரசுத் தலைவருக்கு 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி, கவுதம சிகாமணி, தமிழச்சி தங்க பாண்டியன், மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், முரளிதரண் மற்றும் நவாஸ் கனி, கே.எம்.ஆரீப் உள்ளிட்ட எம்.பி.க்.கள் இந்த கடிததத்தை அனுப்பி உள்ளனர். 

அந்த கடிதத்தில், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல், நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 14ம் தேதி அன்று அளித்த பதிலில், இந்தியாவின் கலாச்சார தோற்றுவாய் அதன் பரிணாமம் குறித்து 12000 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வுக்குட்படுத்த ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ளனர். 

இந்த 16 பேர் கொண்ட நிபுணர் குழுவில், தென்னிந்தியர், வடகிழக்கு இந்தியர், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பெண்கள் இல்லை என்று கடிதத்தில் தெரிவித்துள்ளனர். 

தென்னிந்திய மொழிகளின், பெருமைமிக்க வரலாற்றையும் மத்திய அரசாலேயே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் மொழி ஆய்வாளர்கள் யாரும் குழுவில் இல்லை என்றும், எனவே, இக்குழுவின் உள்ளடக்கம் இது அமைக்கப்பட்டுள்ள நோக்கம் குறித்த ஐயங்களையே எழுப்புகிறது என்றும் கூறியுள்ளனர். 

இக்குழு அறிவியல் பார்வையோடு ஆய்வு செய்ய இயலாது,  வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுத்துவிடும் எனக் கருதுவதுள்ளதாக கூறியுள்ள எம்.பி.க்கள், இப் பிரச்சினையில் குடியரசுத் தலைவர் தலையிட்டு, அரசு அமைத்துள்ள இக் குழுவை கலைக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.