கேரளாவுக்குள் நுழைய தொடரும் கட்டுப்பாடுகள் - இ-பாஸ் நடைமுறை காரணமாக விவசாயிகள் அவதி

இடுக்கி மாவட்டத்திற்குள் நுழைய கேரள போலீசார் அனுமதிக்காததால் தமிழக தோட்டத் தொழிலாளர்களை மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவுக்குள் நுழைய தொடரும் கட்டுப்பாடுகள் - இ-பாஸ் நடைமுறை காரணமாக விவசாயிகள் அவதி
x
ஊரடங்கு காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் கேரளாவிற்கு செல்வதற்கு இபாஸ் முறை தற்போது வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, இதனால்  கேரளாவில் உள்ள தங்கள் விளை நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை அப்பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது,. இதனால்  ஆந்திரம் அடைந்த  தோட்டத் தொழிலாளர்கள்  மற்றும் விவசாயிகள்  போடி மெட்டு எல்லையில்  தங்களது வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்,.  இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது,. கடந்த 5 மாதத்திற்கும் மேலாக கேரள அரசு  பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருவதால் தங்களுடைய தோட்டத்திற்கு செல்ல முடியவில்லை எனவும் இதனால்  மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்கள் அழுகி பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்