ஸ்வப்னா சுரேஷூக்கு 4 நாட்கள் என்ஐஏ காவல்

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷூக்கு 4 நாட்கள் என்ஐஏ காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்வப்னா சுரேஷூக்கு 4 நாட்கள் என்ஐஏ காவல்
x
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கை சுங்கத்துறை, என்ஐஏ, அமலாக்கத்துறை என 3 பிரிவுகள் விசாரணை நடத்தி வருகிறது. 
இந்த விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஷரித் ஆகிய 3 பேரையும் என்ஐஏ உள்ளிட்ட 3 துறைகளும் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இந்த நிலையில் மீண்டும் ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்த அனுமதிக்க கோரி என்ஐஏ சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இவர்களின் கோரிக்கையை ஏற்று 4 நாட்கள் காவல் அளித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்