வேளாண் மசோதா : வெங்கய்ய நாயுடு விளக்கம் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

வேளாண் மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசுக்கு 3 கோரிக்கைகள் வைத்துள்ளன.
வேளாண் மசோதா : வெங்கய்ய நாயுடு விளக்கம் - எதிர்க்கட்சிகள்  வெளிநடப்பு
x
வேளாண் மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள், அரசுக்கு 3 கோரிக்கைகள் வைத்துள்ளன. அவற்றை நிறைவேற்றும் வரை அவை நடவடிக்கையை புறக்கணிக்கப் போவதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 உறுப்பினர்க​ள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை விட விலை குறைவாக கொள்முதல் செய்யவிடாமல் தனியாரை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. 

இன்று அவை கூடியதும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும் போது இதனை வலியுறுத்தினார். மேலும், கடந்த 20 ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மீண்டும் வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்றும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், எஞ்சிய மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் அவையை புறக்கணிப்பதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பேசும் போது, அவையில் இருந்து உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இது முதல் முறையல்ல என்றார்.நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமை உள்ளதாகவும், அதே நேரத்தில் அதற்கு முறையாக விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். 

சஸ்பெண்ட் நடவடிக்கை உறுப்பினர்களுக்கு எதிரானது அல்ல என்றும், அவர்களின் செயல்பாடுகள் தொடர்பானது தான் என்றும் கூறிய வெங்கய்யா, பல்வேறு சூழ்நிலைகளில் மசோதா மீது வாக்கெடுப்பு கோருவது உறுப்பினர்களின் உரிமை என்றும், உறுப்பினர்களை 13 முறை இருக்கையில் சென்று அமர, துணை சபாநாயகர் கேட்டுக் கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார்.தவறுவது மனித இயல்பு தான் என தெரிவித்த வெங்கய்யா நாயுடு, கொரோனா கால வழிமுறைகளை பின்பற்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக இடைவெளியே கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட நிலையில், வெங்கய்ய நாயுடுவின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.  



Next Story

மேலும் செய்திகள்