எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்கள் வெளியேற மறுத்தது விதிமீறல் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

மாநிலங்களவை தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி-க்கள் வெளியேற மறுத்தது விதிமீறல் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
x
மாநிலங்களவை தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி-க்கள்  வெளியேற மறுத்தது விதிமீறல் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களவை விதிகளை மீறும் வகையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நடந்து கொண்டதாகவும், இந்த சம்பவம் நடந்த நாள், நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் வெட்கக் கேடான நாள் என்றும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார். மேலும், மாநிலங்களவையில் 72 பேர் மட்டுமே மசோதாவை எதிர்த்து வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்தார். வேளாண் சட்டங்களால் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் எந்த விளைவும் ஏற்படாது எனவும் அவர் உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்