ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
x
கொரோனா அச்சத்தால் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மூடப்பட்ட பள்ளிகள் 6 மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டன. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிக்குச் செல்ல மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பெற்றோரின் உரிய அனுமதியுடன் எழுத்துப்பூர்வ கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். 50 சதவீத மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும், பேனா, பென்சில் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக் கூடாது, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மாணவர்கள் அமர வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்