கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு - குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்
பதிவு : செப்டம்பர் 21, 2020, 03:21 PM
கொரோனா தொற்று லட்சக்கணக்கான குழந்தைகளை, குழந்தை தொழிலாளர்களாக்கலாம் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், குழந்தைகள் நல ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி கவலை தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று லட்சக்கணக்கான குழந்தைகளை, குழந்தை தொழிலாளர்களாக்கலாம் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், குழந்தைகள் நல ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி கவலை தெரிவித்து உள்ளார். மேலும், குழந்தை திருமணங்கள், பள்ளி இடைநிறுத்தம் போன்றவை அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 40 வருடங்களாக ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளை கொத்தடிமைதனம் மற்றும் கடத்திலில் இருந்து காப்பாற்றிய அவர், வைரஸ் தொற்று குழந்தை தொழிலாளர் தடுப்பு நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என வேதனையை தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.