கர்நாடக சட்டப் பேரவை கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்- எடியூரப்பா

கொரோனா தொற்று காரணமாக சட்டப் பேரவையை முன்கூட்டியே முடித்துக் கொள்ள ஆலோசித்து வருவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப் பேரவை கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்- எடியூரப்பா
x
கொரோனா தொற்று காரணமாக சட்டப் பேரவையை முன்கூட்டியே முடித்துக் கொள்ள ஆலோசித்து வருவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக 50 முதல் 60 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது.  எனவே சட்டப் பேரவை கூட்டத் தொடரை 3 நாட்களில் முடித்துக் கொள்வது தொடர்பாக எதிர்க் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும், முக்கியமான விஷயங்களை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு பேரவையை விரைந்து முடித்துக் கொள்ள முயற்சிப்போம் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்