விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதி கொடுப்பதை நிறுத்துங்கள் - ப.சிதம்பரம்

விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதையும், அவர்களை ஏமாற்றுவதையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதி கொடுப்பதை நிறுத்துங்கள் - ப.சிதம்பரம்
x
தனிநபர் விளைபொருள் பரிமாற்ற​த்துக்கும், குறைந்த பட்ச ஆதார விலை அளிக்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதி, ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி போன்ற மோசடியானது என ப.சிதம்பரம் சாடியுள்ளார். நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் நாள்தோறும், லட்சக்கணக்கான வேளாண் பொருட்கள் விற்பனை தொடர்பாக பரிமாற்றம் நடைபெற்று வருவதாகவும், இந்த பரிமாற்றங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் எப்படி குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்யும் எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். எந்த சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை தனியாக கொள்முதல் செய்பவர் தர சம்மதித்துள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், பிரதமரும் அமைச்சர்களும், குறைந்தபட்ச ஆதார விலை உறுதியாக வழங்கப்படும் என கூறிவரும் நிலை​யில் எப்படி என நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும் ஒரு விவசாயி என்ன விளைச்சல் எடுத்துள்ளார், யாருக்கு அதனை விற்றுள்ளார் என்பது அரசுக்கு எப்படி தெரியும் எனவும் ப.சிதம்பரம் மோடி அரசுக்கு கேள்வி எழுப்பி​யுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்