இந்தியாவில் 55 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 1,130 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்குகிறது.
இந்தியாவில் 55 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 1,130 பேர் பலி
x
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 86 ஆயிரத்து 961 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 54 லட்சத்து 87 ஆயிரத்து 580 - ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 130 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர்.  இதுவரை மொத்தம் 87 ஆயிரத்து 882 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 43 லட்சத்து 96 ஆயிரத்து 399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்