இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக சேவை - ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல் இறுதி பயணம்

மும்பை கடற்படையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல், கடலில் தன்னுடைய இறுதி பயணமாக குஜராத் மாநிலம் அலாங்கிற்கு புறப்பட்டு சென்றது.
இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக சேவை - ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல் இறுதி பயணம்
x
மும்பை கடற்படையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல், கடலில் தன்னுடைய இறுதி பயணமாக குஜராத் மாநிலம் அலாங்கிற்கு புறப்பட்டு சென்றது. அங்கு, கப்பல் உடைக்கப்பட உள்ளது. மும்பை கடற்கரை பகுதியிலிருந்து புறப்பட்ட கப்பலை மக்கள் பலரும் தங்களுடைய செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்டனர். இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக சேவை புரிந்து வந்த ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல் ஆயுளை இழந்ததும் 2017-ம் ஆண்டு கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டது. 1989-ல் இலங்கையில் இந்திய அமைதிப்படை பணியிலும், 1999-ல் கார்கில் போரின் போதும் ஐஎன்எஸ் விராட் முக்கிய பங்காற்றியது. முன்னதாக 27 ஆண்டுகள் ஆங்கிலேய கடற்படையில் பணியாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்