காதல் என்ற பெயரில் மதமாற்றம் - லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசரச் சட்டம்

காதல் என்ற பெயரில் மதமாற்றம் செய்வதை தடுக்க, தேவைப்பட்டால் அவசரச்சட்டம் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
காதல் என்ற பெயரில் மதமாற்றம் - லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசரச் சட்டம்
x
காதல் என்ற பெயரில் மதமாற்றம் செய்வதை தடுக்க, தேவைப்பட்டால் அவசரச்சட்டம் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். பெண்களை மயக்கி மதமாற்றம் செய்து கொடுமை  செய்யப்படும் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் சட்டம் அவசியம் என முதல்வர் உணர்கிறார் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி விசாரிக்க கான்பூரில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அம்மாநில சட்ட ஆணையம் கட்டாய மதமாற்றம் குறித்த அறிக்கை ஒன்றையும் அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்