போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு புதிய முனையம் - ரூ.700 கோடி செலவில் 65% பணிகள் நிறைவு

போர்ட் பிளேரில் உள்ள வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்துக்கு புதிய முனையம் விரைவில் கட்டிமுடிக்கப்படவுள்ளது.
போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு புதிய முனையம் - ரூ.700 கோடி செலவில் 65% பணிகள் நிறைவு
x
போர்ட் பிளேரில் உள்ள வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்துக்கு புதிய முனையம் விரைவில் கட்டிமுடிக்கப்படவுள்ளது.  இந்த விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 18 லட்சம் விமானப் பயணிகளை கையாள்கிறது. தற்போது, இங்கு விமான போக்குவரத்து அதிகரித்துள்ளதால்,  இங்கு 700 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் அமைக்கும் பணியை விமான நிலைய ஆணையம் மேற்கொண்டுள்ளது. 3 அடுக்காக அமையவுள்ள இந்த புதிய முனைய கட்டிடம் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் உடையதாகவும் இருக்கும்.  இதில் மொத்தம் 28 பரிசோதனை கவுன்டர்கள் அமைக்கப்படும் தற்போது இந்த முனையத்தில் 65 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ள நிலையில்,  அடுத்தாண்டு மத்தியில் இந்த புதிய முனையம் தயாராகிவிடும்.


Next Story

மேலும் செய்திகள்