முதியவர் மீது பாலியல் புகார் அளித்ததால் கோபம் - பெண் மீது கொடூர தாக்குதல்
உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தில் ஒரு பெண் சாலையில் அடித்து துன்புறுத்தப்படும் கொடூர வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தில் ஒரு பெண் சாலையில் அடித்து துன்புறுத்தப்படும் கொடூர வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தனது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் அடித்து துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். வீடியோவை கண்ட போலீசார் கொடூர தாக்குதல் நடத்தியவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். நடுரோட்டில் பெண் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.
Next Story

