நொடிப்பு-வங்கி திவால் திருத்த மசோதா 2020 - மாநிலங்களவையில் தாக்கல்
நொடிப்பு மற்றும் வங்கி திவால் அவசர சட்டத் திருத்த மசோதா 2020 ஐ மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்துள்ளார்.
வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி, அதை செலுத்தாமல் ஏமாற்றி வரும் தனி நபர்கள், நிறுவனங்கள் மீது, கடன் நொடிப்பு திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, குறிப்பிட்ட வங்கிக்கு தற்போது உள்ள சட்டப்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியும். கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது வங்கிகள் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டத்தைப் பயன்படுத்தி, கம்பெனி அல்லது வியாபாரத்தை முழுமையாக கைப்பற்றி விடுவார்கள். கைப்பற்றிய கம்பெனி (அ) வியாபாரத்தை வேறு ஒருவருக்கு விற்று சொத்துக்களை விற்று வரும் பணத்தை வங்கிகள் கொடுத்த கடன் மற்றும் அதற்கான வட்டியைக் கழித்துக் கொள்வார்கள். மீதி பணம் இருந்தால் கடன் வாங்கியவருக்கு கொடுப்பார்கள். இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் பொது முடக்கத்தின் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், அந்நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், வங்கி திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் தொழில் நிறுவனங்ககளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கி திவால் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கும் வகையில் கடன் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டம் 2020-ல் திருத்தும் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரச் சட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அடுத்த 6 மாதங்கள் அல்லது அதற்கும் மேல் நீட்டிக்கபப்டும் வரை இந்த காலகட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது தற்காலிகமாக இந்த மசோதா மூலம் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Next Story

