மாநிலங்களவை துணை தலைவராக ஹரிவன்ஸ் வெற்றி

மாநிலங்களவை துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜன‌நாயக கூட்டணியை சேர்ந்த ஹரிவன்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.
x
மாநிலங்களவை துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜன‌நாயக கூட்டணியை சேர்ந்த ஹரிவன்ஸ் வெற்றி பெற்றுள்ளார். மாநிலங்களை தலைவர் வெங்கையா நாயுடு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் பெயரை பாஜக தலைவர் ஜேபி நட்டா, ராம்விலாஸ் பஸ்வான், தாவர் சந்த் கெலாட் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். எதிர்த்து போட்டியிட்ட மனோஜ் குமார் ஜாவின் பெயரை ஆனந்த் சர்மா, திருச்சி சிவா உள்ளிட்டோர் முன் மொழிந்த‌து குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்