நடிகர் மம்முட்டியின் பிறந்தநாள் விழாவிற்கு தன்னை அழைக்கவில்லையே!- அழுது புலம்பிய 4 வயது சிறுமிக்கு பேரின்ப அதிர்ச்சி தந்த மம்முட்டி
பதிவு : செப்டம்பர் 13, 2020, 10:30 PM
கேரளாவில் நடிகர் மம்முட்டியின் பிறந்தநாள் விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என அழுது புலம்பிய 4 வயது சிறுமிக்கு அவர் பேரின்ப அதிர்ச்சி தந்தார்.
மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட திரூர்காடு பகுதியைச் சேர்ந்த ஹமீது அலி- சஜ்னா தம்பதியரின் மகள் 4 வயது பீலிமோள்.  கடந்த 7ஆம் தேதி தனது பிறந்தநாளன்று நடிகர் மம்முட்டி  கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த காட்சியை தொலைக்காட்சியில் ஹமீது அலி தனது குடும்பத்தினருடன் வீட்டிலிருந்து பார்த்தார். அப்போது, நடிகர் மம்முட்டியின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறி சிறுமி பீலிமோள் அழத் தொடங்கினார். மகள் அழுது கொண்டிருந்த காட்சியை தாய் சஜ்னா பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோவை கண்ட நடிகர் மம்மூட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோ காட்சியை வெளியிட்டு, சிறுமியிடம் கோபப்பட வேண்டாம் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், திடீரென பீலிமோளின் வீட்டிற்கு கேக்கை பார்சலில் அனுப்பி தனது பிறந்த நாளை  கொண்டாடுமாறு மம்மூட்டி வேண்டுகோள் விடுத்தார். குடும்பத்தினரோடு கேக்கை வெட்டி கொண்டாடிய சிறிது நேரத்தில் மம்முட்டி வீடியோ காலில்  சிறுமி பீலிமோளுடன் உரையாடினார்.  இந்த நிகழ்வு பீலிமோளுக்கு  மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்கும் பேரின்ப அதிர்ச்சியாக இருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5371 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2375 views

தேர்தலை சந்திக்கத் தயார் - பாஜக மாநில தலைவர் முருகன்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசி உள்ளார்.

473 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

345 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

281 views

பிற செய்திகள்

காதல் என்ற பெயரில் மதமாற்றம் - லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசரச் சட்டம்

காதல் என்ற பெயரில் மதமாற்றம் செய்வதை தடுக்க, தேவைப்பட்டால் அவசரச்சட்டம் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

8 views

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

154 views

"புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்கள் அல்ல" - மாநிலங்களவையில் திமுக எம்.பி. சண்முகம் பேச்சு

புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி. சண்முகம் பேசினார்.

39 views

"புதிய கல்வி கொள்கை அமலால் இந்தியாவின் பழம்பெருமை திரும்பும்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

நவீன கல்வி முறையில் இந்தியாவின் உயர் கல்வி நிலையங்களால் உயர்ந்த நிலையை எட்ட முடியவில்லை என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

53 views

இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் - பிரதமர் மோடிக்கு, நடிகை கங்கனா கோரிக்கை

இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

83 views

கொரோனா மீட்பு எண்ணிக்கை- அமெரிக்காவை முந்தியது இந்தியா

இந்தியாவில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

563 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.