உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா கோரி போராட்டம் : போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு

அமலாக்கத் துறை விசாரணைக்கு உள்ளான கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல், பதவியை ராஜினாமா செய்யக் கோரி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமை செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா கோரி போராட்டம் : போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு
x
தங்கக் கடத்தல் விவகாரத்தை விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டி. ஜலீலிடம் கொச்சியில் விசாரணை மேற்கொண்டனர். வெளியுறவுத்துறை அமைச்சக அனுமதி இல்லாமல் மத நூல்களை அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு இறக்குமதி செய்தது தொடர்பாக அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்க் கோரி மாநிலம்  முழுவதும் பா.ஜ.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் அக்கட்சி  நிர்வாகிகள் 4 பேர் காயமடைந்தனர்.  மேலும், மலப்புரத்தில்  அமைச்சர் ஜலீலின் வீட்டு முன்பு காங்கிரஸ் மற்றும்  முஸ்லிம் லீக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஜலீலின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடைபெற்றது. 

இதற்கிடையே, போலீஸ் தாக்குதலை கண்டித்து இன்று சனிக்கிழமையன்று கறுப்பு நாளாக அனுசரிக்கப்படும் என கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்