சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யை சந்திக்க ரஷியா சென்றார், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று இரவு ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யை சந்திக்க ரஷியா சென்றார், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
x
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று இரவு ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.  
4 நாட்கள் அரசுமுறைப்பயணமாக ரஷியா சென்றுள்ள அவரை ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் வரவேற்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்றப்பின் நாளை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யை, ஜெய் சங்கர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, சீன - இந்திய எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்