இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை : "அரசியல் ரீதியாக பேச்சு நடத்த வேண்டும்" - வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்தியா, சீனா இடையே கடந்த 30 ஆண்டுகளாக சிறிய அளவில் கருத்துவேறுபாடுகள் மற்றும் உரசல்கள் இருந்தாலும் எல்லையில் அமைதியும் நல்லிணக்கமும் நீடித்து வந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை : அரசியல் ரீதியாக பேச்சு நடத்த வேண்டும் -  வெளியுறவுத்துறை அமைச்சர்
x
இந்தியா, சீனா இடையே கடந்த 30 ஆண்டுகளாக சிறிய அளவில் கருத்துவேறுபாடுகள் மற்றும் உரசல்கள் இருந்தாலும், எல்லையில் அமைதியும் நல்லிணக்கமும் நீடித்து வந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள நிலை மிகவும் நெருடலாக உள்ளதாகவும், இதற்கு அரசியல் உயர் மட்டத்தில் விரிவான ஆழ்ந்த பேச்சுவார்த்தை அவசியம் என்றும், அதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வுக்காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எல்லைப் பிரச்சனையை தவிர்த்துவிட்டு இருநாடுகளும் சகோதரத்துவத்தை, உறவை சுமூகமாக வேணுவது என்பது சாத்தியமல்ல என்றும் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்