சமச்சீர் தவறினால் சுயஅழிவுக்கு வழிவகுக்கும் - மன்மோகன் சிங்
பதிவு : செப்டம்பர் 08, 2020, 12:41 PM
வளர்ச்சி திட்டங்கள், வனம் மற்றும் வன உயிரினங்களை பாதிக்கும் என்றால் அதற்கு அனுமதி அளிப்பதில் தமது அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டதாகவும், இதற்காகவே வெகுவாக பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று இந்திரா காந்தி அமைதி விருது வழங்கும் விழா காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், பிரிட்டிஷ் ஒளிபரப்பாளர் டேவிட் அடன்பரோகுவாவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்,  தமது தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் செய்ததாக பலர் விமர்சனம் செய்ததை சுட்டிக்காட்டினார். பொருளாதார வளர்ச்சி மற்றும் இயற்கை  பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் சமச்சீர் அவசியம் எனவும், இதில் எது மாறினாலும் அது தீங்கை விளைவித்து, பேராபத்தை ஏற்படுத்தும் என தாம் கருதியதாகவும் மன்மோகன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.