விசாரணை வளையத்தில் கன்னட திரையுலகம் - நடிகை ராகினி திவேதி 2வது குற்றவாளியாக சேர்ப்பு
பதிவு : செப்டம்பர் 06, 2020, 09:01 AM
கர்நாடக மாநிலத்தில் கிளம்பிய போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை ராகினி திவேதி, 2 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
விதவிதமான மிட்டாய்கள் போல போதைப் பொருட்களை உருமாற்றி அதை விஐபிகளை குறிவைத்து விற்பனை செய்த போதைப் பொருள் கும்பலை சேர்ந்த 3 பேர் பெங்களூருவில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெங்களூருவில் ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ரவிசங்கர் முக்கிய குற்றவாளியாக இருந்தது தெரியவந்தது. இவருடைய செல்போனில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் , இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் நடிகை ராகினி. ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நடிகை ராகினியுடன் ஓரே வீட்டில் ரவிசங்கர் இருந்ததும் உறுதியாகி உள்ளது. மாத சம்பளமாக 35 ஆயிரம் ரூபாய் வாங்கிய ரவிசங்கர், ராகினிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்தது எப்படி? என்றும் கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்த சர்ச்சையில் சிக்கியிருப்பவர் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா. இவரும் இருவடைய ஆண் நண்பரான ராகுல் மற்றும் வீரேன் கான் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அதேநேரம் கன்னட திரையுலகத்திற்கு போதைப்பொருள் விநியோகம் செய்த ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த லோம் பெப்பர் சாம்பா என்பவரும் கைதாகி உள்ளார். போதைப் பொருள் கடத்தல் மன்னனான இவர், கன்னட திரையுலக விஐபிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. நடிகை ராகினி திவேதியுடன், கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா இருக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது விஜயேந்திராவுக்காக வாக்கு சேகரித்துள்ளார் ராகினி திவேதி. இந்த கடத்தல் கும்பலுடன் கேரள தங்க கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்க ராணி ஸ்வப்னா உள்ளிட்டோருடன் கைதான ரெமீஸ் என்பவருக்கும் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய முகமது அனூப் என்பவருக்கும் நீண்ட காலமாக தொடர்பு இருந்துள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட முகமது அனூப், கர்நாடகாவில் ஓட்டல் ஒன்றை திறந்த போது அதற்காக கேரள திரை உலகத்தினர் பலரும் வாழ்த்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இதை ஆதாரமாக வைத்து இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைதான முகமது அனூப்புக்கும் கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினிஷ்ஷூக்கும் தொடர்பு இருப்பது உறுதியான நிலையில் இது அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது மும்பையில் ரியா சக்கரபோர்த்தி பற்ற வைத்த நெருப்பு கர்நாடகாவை தொடர்ந்து இப்போது கேரளாவிலும் உக்கிரத்தை காட்ட தொடங்கியிருக்கிறது... 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

125 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

46 views

பிற செய்திகள்

இசை உலகை விட்டுப் பிரிந்தார் எஸ்.பி.பி. - தேகம் மறைந்தாலும் இசையாய் காற்றில் மலர்ந்த எஸ்.பி.பி.

பொறியாளராக வேண்டும் என்று கனவு கண்டவர், தமிழ்த் திரையுலகை தன் வசீகரக் குரலால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிப்போட்டார். மறைந்த பின்னணி பாடகர், எஸ்.பி.பி.யின் திரைப்பயணத்தையும், வாழ்க்கைப் பயணத்தையும் திரும்பிப் பார்க்கலாம்.

18 views

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. காலமானார்

சென்னையில் இன்று பிற்பகல் காலமான பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிமணியத்தின் உடல், நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

83 views

தனக்கு தானே பஞ்ச் டயலாக் எழுதிய ரஜினி - "அண்ணாத்தே" படத்தில் வெளிவரும் என படகுழு தகவல்

அண்ணாத்தே படத்தில் நடிகர் ரஜினியின் கதாபாத்திரத்திற்கு தேவையான பஞ்ச் டயலாக்குகளை அவரே எழுதி உள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது.

289 views

ஆக.5-ல் மருத்துவமனையில் எஸ்.பி.பி அனுமதி - ஆக.20-ல் கூட்டு பிரார்த்தனை நடத்திய திரையுலகம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடந்த 50 நாட்களில் எஸ்.பி.பிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் அவரது உடல்நிலை குறித்த விவரங்களை பார்ப்போம்.......

466 views

பா.ரஞ்சித், ஆர்யா இணையும் அடுத்த படம் - கட்டுமஸ்தான உடலுக்காக வருத்திக்கொள்ளும் ஆர்யா

நடிகர் ஆர்யா தனது அடுத்த படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

36 views

நலமுடன் இருப்பதாக நடிகர் ராமராஜன் அறிக்கை - முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பு

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் ராமராஜன் தாம் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

360 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.