பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
x
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி கரசேவகா்களால் பாபா் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ராம ஜென்மபூமி இயக்கத்தை முன்னெடுத்த பா.ஜ.க. மூத்த தலைவா்கள் அத்வானி, முரளி மனோகா் ஜோஷி உள்ளிட்ட தலைவா்கள், மசூதி இடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு, லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலை​யில் வழக்கு விசாரணை நிறைவடைந்தது.  இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். இம்மாத இறுதிக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்