நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு - நடிகை ரியா மீது போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில், அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு - நடிகை ரியா மீது போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு
x
இந்த வழக்கில் ரியா மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் உச்சநீ்திமன்ற உத்தரவின் பேரில் தற்போது இந்த வழக்கை சிபிஐயும் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், சுஷாந்த மரண வழக்கில் ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

ரியா தனது செல்போன் போனில் இருந்து ஜெய சஹா என்பவருக்கு அனுப்பிய வாட்ஸ் அப் தகவலில் இருந்து, போதை பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்