பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வைர வர்த்தகம் - தொழிலாளர்கள் பாதிப்பு

பொது முடக்கத்தால் மீள முடியாத நிலைக்கு, வைர வர்த்தகம் தள்ளப்பட்டுள்ளது.
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வைர வர்த்தகம் - தொழிலாளர்கள் பாதிப்பு
x
உலகின் வைர தேவையில் 90 சதவிகிதத்தை பூர்த்தி செய்வது இந்தியாவின் சூரத் வைர சந்தை தான். சூரத்தில், வைரத்திற்கு பட்டை தீட்டும் தொழில் குடிசை தொழில் போல் நடைபெற்று வருகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகள் இதில் ஈடுபட்டுள்ளன. கொரோனா வைரஸ் மனித சமுதாயத்தை தாக்கியது போல, வைர தொழிலையும் பெரிதும் தாக்கியுள்ளது. வைர ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இத்தொழிலில்  ஈடுபட்டு வந்த தொழிலாளர்களுக்கும் பெரிதும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு, 50 சதவிகிதம் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்